ஜம்மு காஷ்மீரில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது.!
ஜம்மு காஷ்மீரில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் நேற்று புதிதாய் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1013 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 513 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.