கர்நாடகாவில் கொரோனாவால் 272 பேர் உயிரிழப்பு..பாதிப்பு எண்ணிக்கை 18,016 ஆக அதிகரிப்பு.!
கர்நாடகா மாநிலத்தில் என்றும் இல்லாத அளவாக நேற்று மட்டும் 1,502 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,016 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 1,502 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,016 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 271 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 8334 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 272 உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.