#Breaking:மக்களே கவலை வேண்டாம்…மீண்டும் 2 ஆயிரத்துக்கு கீழ் சரிந்த கொரோனா பாதிப்பு!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,202 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 1,569 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,25,370 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆக பதிவாகியுள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,260 ஆக பதிவாகியுள்ளது.அதைப்போல,கடந்த ஒரே நாளில் 2,467 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,84,710 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16,400 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 1,91,48,94,858 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 10,78,005 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested