வெவ்வேறு இடங்கள்.. வெவ்வேறு கொண்டாட்டங்கள்.. ஒரே ஒரு தீபாவளி பண்டிகை.!

Diwali Celebration in india

நாளை (நவமபர் 12) நாடெங்கிலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை உருவான வரலாறு, அதன் புராண கதைகள் எல்லாம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கூறப்படுகிறது.

நரகாசூரனை கிருஷ்ணர் அழித்தத்தால் உருவானது தீபாவளி, வனவாசம் முடிந்து ராமர் சீதையுடன் நாடு திரும்பிய நாள் தீபாவளி எனவும், சமுத்திர புத்திரன் புதல்வி லட்சுமி தேவி தோன்றிய நாள் என பல்வேறு புராண கதைகள் கூறப்படுகின்றன. இந்த கதைகள் அனைத்தும் ஒரேநாளில் அமைந்து விடுவது தான் தீபாவளியின் சிறப்பு.

அதே வேளையில், தீபாவளிக்கு ஒவ்வொரு புராண கதைகள் இருப்பது போல, தீபாவளி கொண்டாட்டஙகளும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடுகிறது.

வடமாநில திருவிழாவா தீபாவளி.? தமிழ் அறிஞர்கள் கூறும் வரலாற்று குறிப்புகள்…

தென் தமிழகம் : 

தென் தமிழகத்தில் குறிப்பாக தமிழகத்தில் நரகாசுரனை கிருஷ்ணர் அழித்த தினம் தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்ந்து குளித்து, புத்தாடை உடுத்தி இறைவனை வழிபடுவர். பின்னர், பெரும்பாலான வீடுகளில் மாமிச உணவு படையல் வைக்கப்படும். பட்டாசு வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவர்.

மேற்கு வங்கம்  : 

தீபாவளி பண்டிகையன்று, காளி பூஜை நடைபெறும். பழங்கால மரபுகள் படி பூஜைகள் நடைபெறும். விளக்குகள் ஏற்றி பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவர்.

மகாராஷ்டிரா :

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளி பண்டிகையானது பசுவை வணங்கும் தினமாக கொண்டாடப்படுகிறது. வசுபராஸ் எனும் பசுக்களுக்கான பூஜையானது மேற்கொள்ளப்படுகிறது.  அன்று கன்றுடன் பசுவை வீட்டிற்கு வாங்குவது தினந்தோறும் பால் தரும் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகிறது.

ஒடிசா : 

ஒடிசா மாநிலத்தில் தீபாவளி பண்டிகையானது முன்னோர்களை வழிபாடும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. வழக்கமான பூஜை தான். அந்த பூஜை முன்னோர்கள் நினைவாக மேற்கொள்ளப்படுகிறது.

குஜராத் :

குஜராத் மாநிலத்தில் தீபாவளி பண்டிகை தினமானது பாரம்பரிய தாண்டியா ராஸ் நடனம் ஆடி கொண்டாடப்படுகிறது. வீடுகளில் வண்ணமயமான விளக்குகள், ரங்கோலி கோலங்கள், இரவு நேர தீபங்கள், வாணவேடிக்கைகள் என மாநிலம் முழுவதும் கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்