கவனம்…! இந்தியாவில் 76 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு.!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 526 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,915 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், புதிய வகை கொரோனாவான XBB 1.16, நம் நாட்டில் 76 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது என்று இந்தியாவில் கொரோனா பரவும் மரபணு வரிசைமுறை மற்றும் வைரஸ் மாறுபாட்டை ஆய்வு செய்து வரும் INSACOG தெரிவித்துள்ளது.

அதன்படி, கர்நாடகத்தில் 30, மகாராஷ்டிராவில் 29, புதுச்சேரியில் 7, டெல்லியில் 5, தெலுங்கானாவில் 2, குஜராத் 1, இமாசலபிரதேசம் 1, ஒடிசாவில் 1 என இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான், XBB 1.16 மாறுபாடு கண்டறியப்பட்டது. பிப்ரவரியில் மொத்தம் 59 ஆக உயர்ந்தது. மார்ச் மாதத்தில் மட்டும், 15 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று INSACOG தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்