coronavirus [file image]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா வால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 533,371-ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 44 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 125 குறைந்து 4,440 ஆக உள்ளது.
ஜே.என் மாறுபாடு காரணமாக கேரளாவும், கர்நாடகாவும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருக்கின்றன. இதனால், நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்த நிலையில், நேற்று கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3-வது முறையும் ஆஜராகாமல் சம்மனை புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்..!
கடந்த வாரத்தில் இருந்து கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…