இந்தியாவில் 602 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு.!

coronavirus

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா வால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவின் மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 533,371-ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 44 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 125 குறைந்து 4,440 ஆக உள்ளது.

ஜே.என் மாறுபாடு காரணமாக கேரளாவும், கர்நாடகாவும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருக்கின்றன. இதனால், நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்த நிலையில், நேற்று கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

3-வது முறையும் ஆஜராகாமல் சம்மனை புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்..!

கடந்த வாரத்தில் இருந்து கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
NTK Leader Seeman
NTK Leader Seeman
Afghanistan vs Australia
tamilnadu city in rain
seeman
Seeman - KayalVizhi