கடந்த 24 மணி நேரத்தில் நேரத்தில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...! 3,915 பேர் உயிரிழப்பு...!

Corona infection has been confirmed in 414,188 people in India in the last 24 hours. 3,915 people were killed.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,915 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுவரை கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,491,598 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,915 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை, 234,083 ஆக அதிகரித்துள்ளது . 3,31,507  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை இந்தியா முழுவதும், 16,49,73,058 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.