இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 3,275 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 3,545 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,94,938 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 55 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆக குறைந்துள்ளது.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,002 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஒரே நாளில் 3,549 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,51,248 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19,688 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 1,89,81,52,695 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 16,59,843 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…