இந்தியாவில் ஒரே நாளில் 3,325 பேருக்கு கொரோனா…17 பேர் பலி.!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,325 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 3,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று 4,282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 3,325 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47,246லிருந்து 44,175ஆக குறைந்ததுள்ளது.
நேற்று ஒரே நாளில் 6,379 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,43,77,257-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47,246 லிருந்து 44,175-ஆக குறைந்துள்ளது.