அதிர்ச்சி..!3 ஆண்டுகளுக்கு முன் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி…!

Published by
Edison

குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தற்போது எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது,குஜராத்தில் உப்லெட்டாவில் வசிக்கும் ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் காலமானார்.பின்னர்,அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இறப்புச் சான்றிதழை சம்பந்தப்பட்ட துறையிலிருந்து பெற்றனர்.இந்த நிலையில்,ஹரதாஸ்பாய் கரிங்கியா இறந்து மூன்று ஆண்டுகள் கழித்து,அவர் தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை மே 3 ஆம் தேதியன்று போட்டுக்கொண்டதாக அவரின் குடும்பத்தினரின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது.

இதுகுறித்து அவரது மருமகன் அரவிந்த் கரிங்கியா கூறுகையில்,”இது எப்படி சாத்தியம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை”,என்று அதிர்ச்சியுடன் கூறினார்.

 

இதற்கு முன்னதாக,இதேபோன்ற வழக்கு தஹோடில் பதிவாகியுள்ளது, அதாவது,நரேஷ் தேசாய் என்பவர் சமீபத்தில் கோவின் நிறுவனத்திடமிருந்து எஸ்எம்எஸ் ஒன்றைப் பெற்றார்,அதில் அவரது தந்தை நட்வர்லால் தேசாய்க்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நட்வர்லால் தேசாய் 2011 ஆம் ஆண்டிலேயே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம்,நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பூசிகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

Published by
Edison

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

5 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

6 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

7 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

8 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

8 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

9 hours ago