காங்கிரஸ் கட்சிக்கு மம்தா பானர்ஜி கூறிய யோசனை.! அகிலேஷ் யாதவ் ஆதரவு.!
ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சி பாஜகவுக்கு எதிராக பெரும்பான்மையுடன் இருக்கிறதோ அந்த கட்சியுடன் மற்ற கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும். – அகிலேஷ் யாதவ் பேச்சு.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை வெற்றிக்கு பிறகு பேசிய மேற்கு வாங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி கூறுகையில், காங்கிரஸ் கட்சியானது தனது சொந்த மாநிலங்களில் தங்களை பலப்படுத்த வேண்டும் மற்ற மாநிலங்களில் பிரதான மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட வேண்டும் என கூறி இருந்தார்.
தற்போது இதே கருத்தை உத்திர பிரதேசம் , சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்வும் கூறியள்ளார். வரும் மக்களவை தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சி பாஜகவுக்கு எதிராக பெரும்பான்மையுடன் இருக்கிறதோ அந்த கட்சியுடன் மற்ற கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியுள்ளார்.