டெல்லியில் இன்று 3,965 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
டெல்லியில் இன்று 3,390 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால், இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,79,715 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று 41பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,361 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 3,965 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,47,446 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 26,908 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.