டெல்லியில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார் ராம்நாத்கோவிந்த்….!!
இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட படுகின்றது. குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இன்று டெல்லியில் முப்படை வீரரர்களின் வகுப்பு நடைபெற இருக்கின்றது.மும்ப்படை அணிவகுப்பை ஏற்று கொடியேற்றி வைக்கின்றார் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த்.
இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இந்திய நாட்டின் குடியரசுதின விழாவின் சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா கலந்து கொள்கிறார். குடியரசு தின விழாவை ஒட்டி நாட்டின் பாதுகாப்பு படைகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறுகிறது.
குடியரசுதினத்தன்று தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் டெல்லியில் 25 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணிவகுப்பு நடக்கும் சாலைகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
டெல்லியில் உள்ள உயரமான கட்டிடங்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ராணுவமும் , காவல்துறையும் ஆளில்லா விமானங்கள் மூலம கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது