தலைநகரில் ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை – காவல் துறை தகவல்

Published by
Venu

கடந்த ஆண்டு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில்  1,699 கற்பழிப்பு சம்பவங்கள், 2,186 பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 65 பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான சம்பவங்கள் டெல்லியில் பதிவாகியுள்ளதாக டெல்லி காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வழக்குகள் 2019 ஆம் ஆண்டினை ஒப்பிடும்போது குறைந்து உள்ளது. 2019 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி, 2,168 கற்பழிப்புகள், 2,921 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் 109 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன.டெல்லி காவல் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2020 ஆம் ஆண்டில் கற்பழிப்பு வழக்குகளில் 1.77 சதவீதம் அந்நியர்கள் குற்றவாளிகள் என்றும் இது 2019-ஆம் ஆண்டில் 2.20 சதவீதமாக இருந்தது என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.குற்றவாளிகளில் 44 சதவீதம் பேர் குடும்பம் அல்லது குடும்ப நண்பர்கள் என்றும் 26 % பிற அறியப்பட்ட நபர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக,டெல்லி காவல்துறையினர் கடந்த ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2,66,070 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 3,16,261 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டை விட 15 சதவீதம் குறைவு ஆகும்.ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை, ஒவ்வொரு 19 மணி நேரத்திற்கும் ஒரு கொலை மற்றும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருட்டு நடைபெறுவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நகரில் கொலை வழக்குகள் 9.40 சதவீதம் குறைந்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் இதுபோன்ற 472 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.2019 -ஆம் ஆண்டு 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் வழக்குகள் 26.67 சதவீதமும், கொள்ளை வழக்குகள் 27.33 சதவீதமும், மோட்டார் வாகன திருட்டு வழக்குகள் 24.23 சதவீதமும், பிற திருட்டு வழக்குகள் 30.52 சதவீதமும் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 0.35 சதவீதம் ஓரளவு உயர்ந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் 1,956 ஆக இருந்த நிலையில், 2020 -ஆம் ஆண்டு மொத்தம் 1,963 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago