10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் சிறப்பான செயல்பாடு.! சொன்னதை செய்து காட்டிய முதலமைச்சர்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவர்களை அம்மாநில அரசு இலவசமாக ஹெலிகாப்டர் சவாரி அழைத்து சென்றது.
பொதுத்தேர்வு எழுதும் பள்ளிமாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் ஒரு சூப்பரான அறிவிப்பை கடந்த மே மாதம் அறிவித்து இருந்தார்.
அதாவது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்டு முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களை சத்தீஸ்கர் மாநில அரசு செலவில் ஹெலிகாப்டரில் இலவச சவாரி அழைத்து செல்லப்படும் என அறிவித்து இருந்தார்
அதனை நேற்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் நிறைவேற்றினார். அதன்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக செயல்பட்ட 125 மாணவர்களை ஹெலிகாப்டரில் சாவாரி ஏற்றி சென்றனர். இந்த சம்பவம், அடுத்து பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஓர் ஊக்க செய்தியாக இருக்கும் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.