தடுப்பூசி போடவில்லையெனில்,சம்பளம் இல்லை….!

Default Image

சத்தீஸ்கரில் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர் தனது ஊழியர்களிடம் தடுப்பூசி போடவில்லையெனில்,சம்பளம் நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ளதால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைத் தடுக்க அந்தந்த மாநிலங்களில் தளர்வுகளுடன் மற்றும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும்,கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன் முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.பின்னர்,மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,சத்தீஸ்கர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளில் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்வர மறுக்கின்றனர்.இதனால்,அம்மாநில பழங்குடி நலத்துறை அதிகாரி கே.எஸ் மஸ்ராம் என்பவர்,தனது ஊழியர்களிடம் கொரோனா தடுப்பூசி போடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்,அவ்வாறு தடுப்பூசி போடத் தவறினால் அடுத்த மாதத்திற்கான அவர்களின் சம்பளம் நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும்,இதுகுறித்து மஸ்ராம் கூறுகையில்,”எனது நோக்கம் எனது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதுதான்.அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை”,என்று அவர் கூறினார்.

இதனையடுத்து,உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் இதுவரை ஊழியர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்