நீட் தேர்வு பயம்.? மாணவர் வாடகை ரூமில் தூக்கிட்டு தற்கொலை.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
மணிப்பூர் மாநிலத்தை தவிர இந்தியா முழுவதும் நேற்று மருத்துவ படிப்பிறகான நுழைவு தேர்வு (NEET) நடைபெற்றது. இந்த நீட் தேர்வினை லட்சகணக்கான மாணவ மாணவியர் எழுதினர். இந்த நீட் தேர்வுக்கு பயந்து மாணவ மாணவியர் தற்கொலை செய்துகொள்ளும் சோகமான நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை, நீட் தேர்வுக்கு முதல்நாள், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு மாணவர் நீட் தேர்வெழுத பயந்து தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெமேதரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாத் குமார் சிங் எனும் மாணவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உள்ளூர் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
சம்பவத்தன்று (சனிக்கிழமை) நியூவாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரகதி நகர் பகுதியில் மாணவர் பிரபாத் குமார் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவின்றனர். காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வு குறித்த பயம் தான் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.