பீகாரில் ஹோமியோபதி மருந்துகளை வைத்து கள்ளச்சாராயம்.! வெளியான அதிர்ச்சி தகவல்கள்.!

Published by
மணிகண்டன்

பீகாரில், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு ஹோமியோபதி மருந்துகள் கொண்ட ரசாயனங்கள் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாடுகளுக்கு  முன்னர் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது பீகார் கள்ளச்சாராய சம்பவம் தான். பீகார் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து , இசுவாபூர் காவல் நிலைய அதிகாரி உட்பட 5 அரசு அதிகாரிகள் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த பீகார் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) காவல் துறையினர், இதுவரை முக்கிய குற்றவாளியான மருத்துவர் ராஜேஷ் சிங் உட்பட 5 பேரை கைது செய்தனர். தகினா கிராமத்தைச் சேர்ந்த ஷைலேந்திர ராய், துப்நகர் தோப்வால் கிராமத்தைச் சேர்ந்த சோனு குமார் மற்றும் டோய்லா கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் மஹ்தோ மற்றும் சஞ்சய் மஹ்தோ ஆகியோர் மீதம் கைதான அந்த 4 பேர் ஆவர்.

தற்போது மேலும் ஒரு கூடுதல் தகவலாக இந்த கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு ஹோமியோபதி மருந்துகள் கொண்ட ரசாயனங்கள் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் கொண்டு இந்த கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லால்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நூன்நகரில் வசிக்கும் மருத்துவர் ராஜேஷ் சிங், சரண் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கள்ளச்சாராய விற்பனையை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையில், கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைய (NHRC) குழு கடந்த செவ்வாய்க்கிழமை பீகாரில் உள்ள சாப்ரா சதார் மருத்துவமனைக்கு வந்திருத்து விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

7 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

7 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

8 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

9 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

12 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

12 hours ago