ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆந்திரா, ஒடிசா.! முன்னிலையில் TDP, பாஜக.!
தேர்தல் முடிவுகள்: இந்தியா முழுக்க 543 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தல் முடிவு நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களும் வெளியாகி வருகின்றன.
இதில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி 131 தொகுதிகள் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. பாஜக 7 தொகுதியிலும், ஜனசேனா 20 தொகுதியிலும் முன்னிலை பெற்று வருகிறது.
ஒடிசாவில், 2000ஆம் ஆண்டு முதல் 5 முறை ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் இந்த முறை 56 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. பாஜக இதுவரையில் 74 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அங்கு மொத்தம் 147 தொகுதிகள் உள்ளன.