ஜோதிராதித்யா சிந்தியா பிரசாரத்தின்போது பாஜகவுக்குப் பதில் தவறுதலாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கும் கமல்நாத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதற்கு இடையில் மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் .ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.இவரது ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியும் ஏற்றது.காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பின்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதனிடையே நவம்பர் 3-ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆகவே பாஜக வேட்பாளர் இமார்த்தி தேவியை ஆதரித்து அக்கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,உங்கள் கைகளை உயர்த்தி நடைபெறும் தேர்தலில் ‘கை’ சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.பின்பு பேச்சை திருத்திக்கொண்டு பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று பேசினார் .இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.கை சின்னம் என்பது அவர் இதற்கு முன் இருந்த காங்கிரஸ் கட்சியின் சின்னம் ஆகும்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…