young girl high under Drugs [file image]
பஞ்சாப் : சமீபகாலமாக பஞ்சாபில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அமிர்தசரஸில் ஒரு பெண் நடுரோட்டில் போதையில் சுயநினைவை இழந்து நின்று கொண்டு இருந்த அதிர்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) படி, பஞ்சாபில் கிட்டத்தட்ட 35% குடும்பங்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும், இளைஞர்களிடையே போதைப்பொருள் பிரச்சினை நீண்டகாலமாக பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை கேட்டவுடனே அதிர்ச்சியாக இருந்த நிலையில், தற்போது போதை பொருள் உட்கொண்டு தங்களுடைய சுயநினைவை இழந்து மிருதன் படத்தில் வரும் ஜாம்பி போல பஞ்சாபில் மக்கள் நடுரோட்டில் நிற்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு பெண் நடுரோட்டில் போதையில் சுயநினைவை இழந்து நின்று கொண்டு இருந்த அதிர்ச்சியான வீடியோவை பாஜகவின் தேசிய செயலாளரான சிர்சா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியீட்டு “அமிர்தசரஸின் இந்த நள்ளிரவு வீடியோ, போதைப்பொருளுக்கு உட்பட்ட இளம் பெண்ணின் இந்த நிலைமை பஞ்சாப் அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது.
3 மாதத்தில் போதைப்பொருள் ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நீங்கள் இப்போது உங்கள் கட்சியினரே இதில் ஈடுபட்டுள்ளனர்! ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் நேரடி தலையீட்டால் போதைப்பொருள் மாஃபியா வலுப்பெற்றுள்ளது… பக்வந்த் மானின் பேராசையால் பஞ்சாபின் இளைஞர்கள் இறக்கின்றனர்” என கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…