மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலை.! 10 பேர் குற்றவாளிகள்.! கேரளா நீதிமன்றம் தீர்ப்பு.!
2018இல் கேரளா, அட்டப்பாடியில் மது எனும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிப்ரவரி 22, 2018இல் பாலக்காடு, அட்டப்பாடியில் உள்ள சிந்தக்கி குக்கிராமத்தைச் சேர்ந்த மது எனும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், மளிகைக் கடையில் உணவுப் பொருட்களைத் திருடியதாகக் கூறி உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்டு, கட்டப்பட்டு, தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.
3,000 பக்க குற்றப்பத்திரிகை :
இச்சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வழக்குப்பதிவு செய்து, 3,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் மொத்தம் 16 பேரை வழக்கில் குற்றம் சாட்டினர். அவர்கள் மீது பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
127 சாட்சிகள் :
மன்னார்க்காடு பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில்,கடந்த ஏப்ரல் 28, 2022 அன்று தொடங்கிய இந்த வழக்கின் விசாரணை மார்ச் 10, 2023 அன்று நிறைவடைந்தது. இந்த வழக்கில் 127 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
14 பேர் குற்றவாளிகள் :
இறுதியாக, சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் குற்றம் சாட்டிய 16 பேரில் உசேன், மரைக்கார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபுபக்கர், சித்திக், உபைத், நஜீப், ஜெய்ஜூமோன், முனீர் சஜீவ், சதீஷ், ஹரீஷ் மற்றும் பிஜூ எனும் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாளை (புதன்கிழமை) தீர்ப்பு விவரங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.