10 ஆண்டுகளில்… 5வது இடத்திற்கு இந்தியா முன்னேறி இருக்கிறது – ஜனாதிபதி திரௌபதி முர்மு உரை
திரௌபதி முர்மு: 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று தொடங்கியது. இதில் முதல் 2 நாட்களில் புதிய எம்பிக்கள் பதிவியேற்பு நடைபெற்று பின் 3-வது நாளான நேற்று அவைத்தலைவர் தேர்வு நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று மாநிலங்கள் அவையின் 264-வது அமர்வு இன்று தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசுகையில், “முதலில் கோடிக்கணக்கான நாட்டு மக்கள் சார்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உலகின் மிகப்பெரிய தேர்தலாகும்.
ஜம்மு & காஷ்மீரில் பல தசாப்த கால வாக்குப்பதிவுகளை இந்த தேர்தலில் முறியடித்துள்ளது. மேலும், 6 தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டில் முழுமையான பெரும்பான்மையுடன் நிலையான ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் 3வது முறையாக இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த லோக்சபா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.18-வது லோக்சபா பல வழிகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மக்களவை ஆகும்.
இந்த பட்ஜெட் அரசாங்கத்தின் தொலை நோக்கு கொள்கைகள், பெரிய பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கான ஒரு பயனுள்ள ஆவணமாக இருக்கும் பல வரலாற்றுப் படிகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும்.
பிரதமர், கிசான் சம்மன் நிதியின் கீழ் நாட்டின் விவசாயிகளுக்கு அரசு ரூ.3.20 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. எனது அரசாங்கத்தின் புதிய பதவிக்காலம் தொடங்கியதில் இருந்து, ரூ.20,000 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய இந்தியா அதன் தற்போதைய தேவைகளை மனதில் கொண்டு உலகில் உள்ள இந்திய விவசாயிகள் இந்த தேவையை பூர்த்தி செய்யும் முழு திறனையும் பெற்றுள்ளது. மேலும், சீர்திருத்தம் மற்றும் செயல்திறனால் மட்டுமே இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக மாற்றியுள்ளது.
10 ஆண்டுகளில், இந்தியா 11 வது இடத்தில் இருந்து 5 வது பெரிய பொருளாதார நாடக உயர்ந்துள்ளது. கொரோனா போன்ற தொற்று நோய்களின் சவால்கள் இருந்த போதிலும் சில சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளால் இந்தியா இந்த வளர்ச்சி விகிதத்தை அடைய முடிந்தது.
மேலும், இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது” என அந்த கூட்டத்தொடரில் பேசி இருந்தார்.