இந்தியா ஒரு இந்துத்துவா தீவிரவாத நாடு.. சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்… மதசார்பற்ற இந்தியர்களை கொதிக்க வைக்கும் இம்ரான் கானின் பேச்சு…

- இந்தியா ஒரு இந்துத்துவா தீவிரவாத நாடு.
- காஷ்மீர் விவகார தோல்வியில் பாகிஸ்தான் பிரதமர் புலம்பல்.
இந்தியாவின் ஒரு மாநிலமான காஷ்மீருக்கான 370 வது சட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும்,பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையிலும், உலக வல்லரசு நாடுகளிடமும் பலமுறை முறையிட்டது. ஆனால், சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஜெர்மனி பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா மீதான பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.இதில் இம்ரான் கான் கூறியதாவது,“காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் முற்றிலும் மந்தமான பதிலையே அளித்துள்ளது. அவற்றுக்கு முக்கிய காரணம் வர்த்தகம்தான்.
ஏனென்றால் இந்தியா மிகப் உலக நாடுகளின் மிகப்பெரிய சந்தை. அதன் காரணமாக காஷ்மீர் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் இவ்வாறு நடந்து கொள்கிறது. சீனாவின் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு கிடைத்த ஊடக கவனம் இந்த காஷ்மீருக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு எச்சரித்த முதல் உலக தலைவர் நான் தான் நான் மட்டும் தான்.இந்தியாவில் ‘இந்துத்துவா’ எனப்படும் தீவிரவாத சித்தாந்தத்தால் இந்தியா கைப்பற்றப்பட்டுள்ளது. இது ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தம் ஆகும். இவர்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்புகின்றனர். நான் பாகிஸ்தானின் பிரதமர் ஆனது முதல் இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயற்சி எடுத்து வருகிறேன்.
பிரதமராக எனது முதல் உரையில், அமைதி பேச்சு வார்த்தையில் இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால் இரு நாடுகளிடையே இடையே உள்ள பிரட்சனையை தீர்க்க நாங்கள் இரண்டு அடி எடுத்து வைக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறி இருந்தேன். அதன்பின் அந்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் காரணமாக இந்தியா இதற்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று எனக்குத் தெரியவந்தது” என்று அந்த ஊடகத்திற்க்கு புலம்பாத குறையாக இம்ரான் கான் கூறினார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையீட்டை இந்தியா என்றும் எதிர்த்து வரும் நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் புரிந்து கொள்வது எப்போது என்று இந்திய அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025