கோவில், மசூதிகளில் கிருமிநாசினி தெளித்து வரும் இஸ்லாமிய பெண்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வடக்கு டெல்லி பகுதிகளில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் போன்ற வழிபாட்டு தளங்களில் இம்ரானா என்கிற இஸ்லாமிய பெண் கிருமி நாசினி தெளித்து வருகிறார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு நடவடவடிக்கைக்காக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் முக்கிய நடவடிக்கையாக மக்கள் கூடும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியிலும் முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
வடக்கு டெல்லி பகுதிகளில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் போன்ற வழிபாட்டு தளங்களில் இம்ரானா என்கிற இஸ்லாமிய பெண் கிருமி நாசினி தெளித்து வருகிறார். இவர் கிருமி நாசினி தெளிக்கும் போது அந்தந்த வழிபாட்டு தளங்களில் இருப்பவர்கள் எதுவும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் இம்ரானா தெரிவித்தார்.
இம்ரானாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமலான் நோன்பு கடைபிடித்துகொண்டு தனது பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)