சுதந்திர தினத்திற்கு இம்ரான் கான் டிவிட்டரில் கருப்பு நிற டிபி வைத்து கருப்பு தினமாக அனுசரிப்பு !
நேற்று இந்தியாவில் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டப்பட்டது. ஆனால் நேற்று இந்திய சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கருப்பு தினமாக அனுசரித்தது.
சில நாள்களுக்கு முன் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்த்து 370 சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்முவை தனி யூனியன் பிரதேசங்களாகவும் , லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றியது.
இதனால் பாகிஸ்தான் இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்தி கொள்ள போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது.இந்நிலையில் இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்து இருந்தது.
இதை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பல வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. பாகிஸ்தானை சேர்ந்த பலர் தங்கள் டிவிட்டரில் டிபியை கருப்பு நிறத்தில் வைத்து இருந்தனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டரில் அவரது படத்திற்குப் பதிலாக கருப்பு நிறத்தில் டிபியை மாற்றி இருந்தார். அவரின் இந்த செயல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.