இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து, 5-ஆம் கட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனைதொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் சிறப்பு திட்டங்களைஅறிவித்து வருகிறார்.
நேற்றைய அறிவிப்பில் கனிமங்கள், தடவாள உற்பத்தி, விமானம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட 8 துறைகளுக்கு முக்கிய திட்டங்களை அறிவித்தார். அதில், முக்கிய அறிவிப்பாக நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.
இதனையடுத்து இன்று 5-வது நாளாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். வழக்கமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாலை 4 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்புகளை அறிவித்து வந்தார். இந்நிலையில், இன்று வழக்கத்திற்கு மாறாக காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
இன்றைய அறிவிப்பில் எத்தனை கோடி அறிவிக்கவுள்ளார்..? எந்தந்த துறைக்கு அறிவிக்கவுள்ளார்..? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…