முக்கிய அறிவிப்பு..! தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே..!
நீங்கள் தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாகும். இந்த ஆண்டு குறைந்தபட்ச கட்டணத்தை தபால் அலுவலக கணக்கில் வைத்திருப்பது அவசியமாகியுள்ளது. ஒரு தபால் அலுவலக கணக்கில் (பிஓ சேமிப்பு கணக்கு) குறைந்தது ரூ.500 வைத்திருப்பது கட்டாயமாகும். இது குறித்து இந்தியா போஸ்ட் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த தகவலின் படி, தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் குறைந்தது ரூ.500 பராமரிக்க இன்னும் 12 நாட்கள் உள்ளன. இந்தியா போஸ்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், ‘இப்போது தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகை பராமரிப்பது கட்டாயமாகும். எனவே நீங்கள் உங்கள் கணக்கில் பராமரிப்பு கட்டணத்தை செலுத்த விரும்பினால் அதை வருகின்ற டிசம்பர் 11-ஆம் தேதிக்கு முன் ரூ.500 க்கு உங்கள் கணக்கில் பராமரிக்கவும் என தெரிவித்துள்ளது.
Now maintaining minimum balance in Post Office Savings Account is mandatory.#MyPostIndiaPost pic.twitter.com/M8VxJht270
— India Post (@IndiaPostOffice) November 28, 2020
தற்போதைய விதி:
இந்தியா போஸ்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, நிதியாண்டின் இறுதியில் சேமிப்புக் கணக்கில் ரூ.500 குறைந்தபட்ச நிலுவைத் தொகை பராமரிக்கப்படாவிட்டால், ரூ.100 கணக்கு பராமரிப்பு கட்டணமாகக் குறைக்கப்படும், மேலும் கணக்கு இருப்பு இல்லை என்றால், கணக்கு தானாக மூடப்படும்.
வட்டி விகிதம்:
சேமிப்புக் கணக்கில் வழங்கப்படும் வட்டி விகிதம் 4 சதவீதமாகும். வட்டி மாதத்தின் 10-ம் தேதி முதல் மாத இறுதி வரையிலான குறைந்தபட்ச நிலுவை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே கணக்கின் இருப்பில் 10-ம் தேதி முதல் மாதத்தின் கடைசி நாள் வரை ரூ.500 க்கு குறைவாக இருந்தால் அந்த மாதத்தில் வட்டி அனுமதிக்கப்படாது.