NEET – PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இட ஒதுக்கீட்டில் வரும் 16 முதல் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ளலாம் என NBE அறிவிப்பு.
செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ள NEET – PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 27% OBC பிரிவினர் அல்லது 10% EWS பிரிவினர் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் உரிமை கோர விரும்பினால், வரும் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ளலாம் என்று NBE (NATIONAL BOARD OF EXAMINATION) அறிவித்துள்ளது.
முதுகலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை என்பிஇ எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. நடப்பு ஆண்டுக்கான NEET – PG தேர்வு கொரோனவால் தள்ளிப்போன நிலையில், நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
முதுகலை நீட் (NEET – PG) தேர்வுக்கான விண்ணப்பத்தைத் தேசியத் தேர்வுகள் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில், இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் https://nbe.edu.in/ என்ற இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…