முக்கிய தகவல்.! ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்.!

Default Image
  • ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் நாளைக்குள் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
  • ஆதார், பான் எண்ணை இணைக்கவில்லை எனில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது.

ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் நாளைக்குள் இணைக்க வேண்டும், என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார், பான் எண்ணை இணைக்கவில்லை எனில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை ஆதார் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்கள்  https://www.incometaxindiaefiling.gov.in என்ற கிளிக் செய்து இணையதளத்தில் சென்று இணைக்கலாம். இதற்காக ஆவணங்கள் எதுவும் தனியாக தேவையில்லை. ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் மட்டும் இருந்ததால் போதும். இந்த இரண்டு எண்ணைகளையும் கொடுத்த பிறகு ஆதாரில் உள்ளது போலவே உங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா எனப்படும் குறியீடு அல்லது ரகசிய எண்ணை (OTP) கொடுத்து ஆதார் பான் கார்டை இணைக்கலாம்.

பின்னர் இரண்டும் இணைக்கப்பட்டுவிட்டால் ஆதாரின் கடைசி 4 இலக்க எண்ணுடன் உறுதிபடுத்தப்பட்ட தகவல் வரும். மேலும் குறுஞ்செய்தி மூலமாகவும் இதனை பதிவு செய்யலாம். UIDPAN ஒரு இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்த பிறகு ஒரு இடைவெளி விட்டு பான் கார்டு எண்ணையும் பதிவு செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பினால் இரண்டும் இணைக்கப்பட்டுவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்