ராமர் கோயில் விழா நிகழ்வுகள்… கட்டட தொழிலாளர்கள் முதல் மோடிக்கு முதல் பிரசாதம் வரை…

Ayodhya Ram Temple - Pran Pratishtha

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா (Ram Mandir Pran Pratishtha) கோலாலகமாக நடைபெற்று வருகிறது . சரியாக நண்பகல் 12.30 மணியளவில் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமர் சிலை நிறுவும் பூஜைகளை பிரதமர் மோடி மேற்கொண்டார். இதற்காக 11 நாட்கள் வரையில் பிரதமர் மோடி விரதம் இருந்து சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு வந்தார்.

வரலாற்று நிகழ்வு.! திறக்கப்பட்ட ராமர் சிலை.! பிரதமர் மோடி உள்ளிட்டோர் சாமி தரிசனம்.!

இந்த விழாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் என பிரபலங்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்து  குழந்தை ராமரை தரிசித்தனர். பிரபலங்கள் ஒரே இடத்தில் கூடி இருந்ததால் பாதுகாப்பு மிக கடுமையாக இருந்தது.

 சங்கர் மகாதேவன் :

விழா தொடக்கத்தில் இருந்தே, மும்பையை சேர்ந்த பிரபல சினிமா பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன் பக்தி பாடல்களை பாடியபடி இருந்தார். பக்தி மிகுதியில் பரவசமாக அவர் பாடுவதை கேட்டு விழாவில் பங்கேற்றவர்கள் பரவசத்துடன் உடன் பாடல் பாடி மகிழ்ந்தனர்.

வணங்கிய பிரதமர் மோடி :

ராமர் கோவில் விழாவுக்கு உள்ளே வந்த பிரதமர் மோடி, அங்கிருந்த திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுக்கு தனது மரியாதையை செலுத்திவிட்டு சென்றார். நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி மற்றும் மத குருக்கள் ஆகியோர் பார்வையாளர் அரங்கில் இருந்தனர்.

சிவன் கோயில் :

ராமர் கோயிலுக்குள் செல்லும் முன்னர் அயோத்தி தாமில் உள்ள சிவன் முன் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

பிரதிஷ்டை பூஜை :

பின்னர் கோயிலுக்குள் சென்ற  பிரதமர் மோடி அங்கு, ராமர் சிலை முன்பு ப்ரதிஷ்டைக்கு முந்தைய பூஜையில் கலந்துகொண்டார். அந்த பூஜையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால்தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர் .

தாமரை மலர்கள் :

பிரதிஷ்டை நிறைவடைந்த பின்னர் தன் கையில் இருந்த தாமரை மலர்களை பகவான் ராமரின் பாதங்களில் வைத்து வணங்கினார்.

பால ராமரை சுற்றி வந்த பிரதமர் மோடி :

பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலையை சுற்றி வந்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

முதல் பிரசாதம் :

11 நாட்கள் விரதமிருந்து பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு ராமர் கோயிலின் முதல் பூஜை முடிந்து முதல் பிரசாதம் வழங்கப்பட்டது.

மோடிக்கு மோதிரம் :

ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வின் போது பிரதமரின் விரலில் ஆன்மீக குரு சாது மோதிரம் அணிவித்து தனது மரியாதை செலுத்தினார்.

கட்டட தொழிலாளர்கள் :

பிரதிஷ்டை விழா நிறைவடைந்து வெளியே வந்த பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டட தொழிலாளர்களை நேரில் சென்று சந்தித்து, அவர்கள் மீது பூக்கள் தூவி நன்றி தெரிவித்து மரியாதை செய்தார் பிரதமர் மோடி.

இரும்பில்லா கோயில் :

ராமர் கோயிலின் அடித்தளமானது 14 மீட்டர் தடிமனான ரோலர்-காம்பாக்டட் கான்கிரீட் (RCC) அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது. இது பாறையின் உறுதியோடு தோற்றமளிக்கிறது. இந்த கோயிலில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. நிலத்தடி ஈரப்பதத்திலிருந்து பாதுகாப்பதற்காக, கிரானைட் கற்களை பயன்படுத்தி 21 அடி உயர ராமர் சிலை பீடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்