பாஜக திட்டத்திற்கு எதிர்ப்பு.! கூட்டணியில் எழும் புதிய பிரச்சனை.!

Default Image

டெல்லி: 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல் போல அல்லாமல், இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாத காரணத்தால் கூட்டணியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் தனிப்பெரும்பான்மை ஆட்சி என்பதால் மற்ற கட்சிகளின் கருத்துக்களை கலந்தாலோசிக்காமல் ஆளும் பாஜக தங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டயத்தில் உள்ளது. இதனால் பாஜகவால் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல், சிஏஏ சட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

NDA கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (JD(U)) செய்தித் தொடர்பாளர் KC தியாகி ANI செய்தியாளர்களிடம் கூறுகையில்,​” அக்னிவீரர் திட்டத்தால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெற்றுள்ள வரவேற்பு பற்றி கேள்வி எழுப்பப்படும்.

அதன் குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அக்னிவீர் திட்டம் அகற்றப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி விரும்புகிறது. இதுகுறித்து எங்கள் தேசியத் தலைவர் சட்ட கமிஷன் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாங்கள் இதற்கு எதிரானவர்கள் அல்ல. அதனால் அனைத்து கூட்டணி கட்சிகளுடன் பேசி தீர்வு காண வேண்டும் என KC தியாகி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்