டெல்லி தப்லீக் ஜமாத் தலைவர் மீது அமலாக்கத்துறை வழக்கு.!
டெல்லியில் மார்ச் மாதம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் பாதித்த நிலையில் அதன் தலைவர் மவுலானா முகமது சாத் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாத் மீது பணமோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
தப்லீக் ஜமாத் தலைவர் சாத் தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் விசாரணைக்கு அமலாக்கத்துறை விரைவில் சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விசா விதிமுறைகளை மீறியதாக 1800 வெளிநாட்டு தப்லீக் ஜமாத் உறுப்பினர்களின் பாஸ்போர்ட்களை முடக்கப்பட்டது.