13,000  கோடி வங்கி மோசடி!!நிரவ்மோடி மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை!!

Published by
Venu
  • பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வங்கி மோசடி விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறிய நிரவ் மோடி.
  • வங்கி மோசடி வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற நிரவ்மோடி மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் , நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வங்கி மோசடி விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார்.
பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. , அமலாக்கப்பிரிவு , வருமான வரித்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் நிரவ்மோடி மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.

முன்னதாக நிரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகியது. இங்கிலாந்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனம் டெய்லி டெலிகிராப்  வெளியிட்ட  வீடியோவில் நிரவ் மோடியின் சொகுசு வாழ்க்கை வெளியானது.
நிரவ் மோடி லண்டனில் 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62.5 கோடி) மதிப்பு  உள்ள சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருவதாகவும் , அந்த பங்களாவின் மாத வாடகை 17,000 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 லட்சம்) என கூறப்படுகிறது.
மேலும் சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவக்கி உள்ளதாகவும் , லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள சொகுசு பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Venu

Recent Posts

ஃபர்ஸ்டு ரஜினி., நெக்ஸ்டு விஜய்.! ராமதாஸ் பேத்தியின் ‘அலங்கு’ படத்திற்கு தீவிர புரொமோஷன்…

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…

4 minutes ago

“இனி காதல்., பரிசுத்த காதல்”.. ரூட்டை மாற்றிய சூர்யா! ‘ரெட்ரோ’ டீசர் இதோ…

சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…

6 minutes ago

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…

2 hours ago

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

2 hours ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

3 hours ago

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!

பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…

4 hours ago