13,000 கோடி வங்கி மோசடி!!நிரவ்மோடி மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை!!
- பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வங்கி மோசடி விட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறிய நிரவ் மோடி.
- வங்கி மோசடி வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற நிரவ்மோடி மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் , நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வங்கி மோசடி விட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. , அமலாக்கப்பிரிவு , வருமான வரித்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நிரவ்மோடி மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.
முன்னதாக நிரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகியது. இங்கிலாந்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனம் டெய்லி டெலிகிராப் வெளியிட்ட வீடியோவில் நிரவ் மோடியின் சொகுசு வாழ்க்கை வெளியானது.
நிரவ் மோடி லண்டனில் 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62.5 கோடி) மதிப்பு உள்ள சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருவதாகவும் , அந்த பங்களாவின் மாத வாடகை 17,000 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 லட்சம்) என கூறப்படுகிறது.
மேலும் சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவக்கி உள்ளதாகவும் , லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள சொகுசு பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.