உலகளாவிய பொருளாதார வளர்ச்சியே 2022 மற்றும் 2023இல் முறையே 3.2 , 2.7 சதவீதமாக குறைந்து இருக்கும் வேளையில் இந்தியாவின் வளர்ச்சி 2022 இல் 6.8 சதவீதமாகவும், 2023இல் 6.1 சதவீதமாகவும் இருக்கும் என IMF கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதி நிறுவனமான IMF =-இன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அண்மையில் இந்திய பொருளாதாரம் பற்றி கூறுகையில், ‘இந்தியாவின் புதிய டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி நல்ல வெற்றியை பெற்றுள்ளது. ‘ என்று கூறினார். மேலும், ‘ டிஜிட்டல் மயமாக்கல் உண்மையில் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு பெரிய காரணியாக அமைந்துள்ளது.’ என்றும் அவர் கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வீதமானது, 2021ஆம் ஆண்டு 6 சதவீதமாக இருந்தது.அனால், 2022 (நடப்பாண்டு) பொருளாதார வளர்ச்சி வீதமானது 3.2 சதவீதமாகவும், 2023 இல் 2.7 சதவீதமாகவும் குறையும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
அதே போல, அடுத்த ஆண்டு இங்கிலாந்து வளர்ச்சி 0.3 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்றும், பிரான்ஸ் 0.7 சதவீததமாகவும், அமெரிக்கா வளர்ச்சி 1 சதவீதமாகவும் தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே போல அண்டை நாடான் சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்துள்ளது, அதன்படி, 2022ல் 3.2 சதவீதமாகவும், 2023ல் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்படி உலகில் பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் வேளையில், இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி 2022இல் 6.8 சதவீதமாக இருக்கும் எனவும், 2023-ல் பொருளாதர வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என IMF நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…