உலகளாவிய வளர்ச்சியை விட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகம்.! வெளியான அசத்தல் ரிப்போர்ட்.!

Default Image

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியே 2022 மற்றும் 2023இல் முறையே  3.2 , 2.7 சதவீதமாக குறைந்து இருக்கும் வேளையில் இந்தியாவின் வளர்ச்சி 2022 இல் 6.8 சதவீதமாகவும், 2023இல் 6.1 சதவீதமாகவும் இருக்கும் என IMF கணித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதி நிறுவனமான IMF =-இன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அண்மையில் இந்திய பொருளாதாரம் பற்றி கூறுகையில், ‘இந்தியாவின் புதிய டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி நல்ல வெற்றியை பெற்றுள்ளது. ‘ என்று கூறினார். மேலும்,  ‘ டிஜிட்டல் மயமாக்கல் உண்மையில் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு பெரிய காரணியாக அமைந்துள்ளது.’ என்றும் அவர் கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வீதமானது,  2021ஆம் ஆண்டு 6 சதவீதமாக இருந்தது.அனால், 2022 (நடப்பாண்டு) பொருளாதார வளர்ச்சி வீதமானது 3.2 சதவீதமாகவும், 2023 இல் 2.7 சதவீதமாகவும் குறையும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

அதே போல, அடுத்த ஆண்டு இங்கிலாந்து வளர்ச்சி 0.3 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்றும், பிரான்ஸ் 0.7 சதவீததமாகவும், அமெரிக்கா வளர்ச்சி 1 சதவீதமாகவும் தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே போல அண்டை நாடான் சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்துள்ளது, அதன்படி, 2022ல் 3.2 சதவீதமாகவும், 2023ல் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இப்படி உலகில் பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் வேளையில், இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி 2022இல் 6.8 சதவீதமாக இருக்கும் எனவும், 2023-ல் பொருளாதர வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என IMF  நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்