#RainAlert:தமிழகம்,கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை – IMD எச்சரிக்கை!

கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில்,இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,மத்திய பிரதேசத்தில் இருந்து கேரளா வரை தென்கிழக்கு திசையில் வட-தெற்கு காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் ஏற்கனவே,கேரளாவில் கடந்த 12 நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும்,கேரளா மாநிலத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது கனமழையும் பெய்து வரும் நிலையில்,இன்றும்,நாளையும் கேரளாவில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் கொந்தளிப்பான பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும்,இன்று மன்னார் வளைகுடா,கொமோரின் பகுதி, தமிழ்நாடு கடற்கரை மற்றும் தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் லட்சத்தீவுகள் மற்றும் கேரளா-கர்நாடகா கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளர்கள்.
♦ Reduction in spatial extent & intensity of heat wave Spell over Northwest India and Madhya Pradesh.
♦ Heavy rainfall likely to continue over Kerala-Mahe & Tamil Nadu-Puducherry- during 12th-14th and over Assam-Meghalaya & Arunachal Pradesh during 13th-16th April, 2022. pic.twitter.com/kEG4y1YtJe— India Meteorological Department (@Indiametdept) April 12, 2022