மனித சோதனைக்கு உட்படுத்தப்படும் இந்திய தடுப்பூசிகள்.! பயன்பாட்டிற்கு எப்போது வரப்போகிறது.?

Default Image

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட COVAXIN மற்றும் ZyCov-D ஆகிய தடுப்பூசிக;ளை மனித சோதனைக்கு உட்படுத்த இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5.3 லட்சத்திற்கும் அதிகமானோரை கொரோனா  வைரஸ் பலி கொண்டுள்ளது. இதனால், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இந்தியா சார்பில் இரண்டு தடுப்பூசிகளான COVAXIN மற்றும் ZyCov-D ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த இரண்டு தடுப்பூசிகளும் சோதனைக்காக மனிதர்களுக்கு உட்படுத்தி சோதனை செய்யப்பட உள்ளன.

உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட வைரஸ் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 11 தடுப்பூசிகள் மனித சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இரண்டு தடுப்பூசிகளும் மனித சோதனைக்கு உட்படுத்த இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த தடுப்பூசி தொடர்பாக AZD1222 (பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா) மற்றும் MRNA-1273 (அமெரிக்காவை தளமாகக் கொண்ட மாடர்னா) ஆகிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்காகவும் விரைவில் தடுப்பூசிகள் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் நிரூபிக்கப்பட உள்ளன.

முதற்கட்ட ஆய்வு சேர்த்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

முதல் இரண்டு கட்டங்களில் மருந்து பாதுகாப்புக்காக சோதிக்கப்படுகிறது. அதன் பின்னர் மூன்றாம் கட்ட சோதனையில் அந்த மருந்தின் செயல் திறன் பற்றி சோதனை நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்ட சோதனை முடிவு வெளிவர மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முதல்கட்ட சோதனை முடிவு வெளியாக கடைசி தேதி ஆகஸ்ட் 15 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த வைரஸ் தடுப்பூசிகள் 2021 க்கு முன்னர் அதாவது இந்த ஆண்டிற்குள் வெகுஜன பயன்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்திய மெடிக்கல் கவுன்சில் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட தடுப்பூசி மருந்தானது 28 நாட்களில் முதற்கட்ட சோதனை நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆகஸ்ட் 15 முதல் கட்ட ஆய்வறிக்கையை வெளியாகும் என திர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு ஒரு தெளிவான முடிவு
தெரியவரும்.

இதுகுறித்து பாரத் பயோடேட்டா அதிகாரி கூறுகையில், ‘பரிசோதனை அனைத்தும் நிறைவு பெற்று இறுதி முடிவு வெளியாக சுமார் 15 மாதங்கள் கூட தேவைப்படலாம்.’ என கூறியுள்ளார். இந்த வைரஸ் தொற்று நோயை சமாளிக்க தடுப்பூசிகள் பலரும் கண்டுபிடித்து பல்வேறு கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த ஆராய்ச்சி போட்டியில் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்