உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் செப்.23ம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள வாரணாசி, தற்போது மாநிலத்தின் முக்கியமான விளையாட்டு மையமாக உருவாக உள்ளது. அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் சுமார் ரூ.450 கோடியில் இந்த மைதானம் அமையவுள்ளது. அதுவும், சிவனின் உருவத்தை அடிப்படையாக கொண்டு 30 ஏக்கரில் மைதானம் உருவாக்கப்படவுள்ளது.மேலும் திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப் பகுதிகளும், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வாரணாசி மைதானம் சுமார் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட உள்ளது. புதிய அக்கட்டப்படவுள்ள மைதானத்தில் டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.
உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் யுத்வீர் சிங் கூறுகையில், இந்த மைதானத்தில் வரும் 2025ம் ஆண்டு முதல் காசி மக்கள் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்று கூறியிருந்தார். 2.5 ஆண்டுகளில் இந்த கிரிக்கெட் மைதானம் கட்டப்படுவதால், வாரணாசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்றும் 121 கோடி மதிப்பிலான மைதானத்தின் நிலம் உத்தரபிரதேச அரசால் ஏற்கனவே வாங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
எனவே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் பங்கேற்புடன் இந்த அடிக்கல் நாட்டு விழா வரும் 23ம் தேதி நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இவ்விழாவில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மேலும், வாரணாசி தொகுதியில் ரூ.1,115 கோடியில் கட்டப்பட்ட 16 பள்ளிகளையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…