சிவனின் உருவம்! வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. செப்.23ல் பிரதமர் மோடி அடிக்கல்!

VARANASI STADIUM

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் செப்.23ம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள வாரணாசி, தற்போது மாநிலத்தின் முக்கியமான விளையாட்டு மையமாக உருவாக உள்ளது. அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் சுமார் ரூ.450 கோடியில் இந்த மைதானம் அமையவுள்ளது. அதுவும், சிவனின் உருவத்தை அடிப்படையாக கொண்டு 30 ஏக்கரில் மைதானம் உருவாக்கப்படவுள்ளது.மேலும் திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப் பகுதிகளும், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வாரணாசி மைதானம் சுமார் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட உள்ளது. புதிய அக்கட்டப்படவுள்ள மைதானத்தில் டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.

உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் யுத்வீர் சிங் கூறுகையில், இந்த மைதானத்தில் வரும் 2025ம் ஆண்டு முதல் காசி மக்கள் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்று கூறியிருந்தார். 2.5 ஆண்டுகளில் இந்த கிரிக்கெட் மைதானம் கட்டப்படுவதால், வாரணாசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்றும் 121 கோடி மதிப்பிலான மைதானத்தின் நிலம் உத்தரபிரதேச அரசால் ஏற்கனவே வாங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

எனவே,  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் பங்கேற்புடன் இந்த அடிக்கல் நாட்டு விழா வரும் 23ம் தேதி நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இவ்விழாவில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மேலும், வாரணாசி தொகுதியில் ரூ.1,115 கோடியில் கட்டப்பட்ட 16 பள்ளிகளையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்