16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு பரட்டை என்ற பெயர் வந்தது. அடுத்த பரட்டை என்று பெயர் வாங்கியது நான்தான் போல, சுருட்டை முடி பறக்கிறது, அவ்வளவு பெரிய இதா?
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது நகைச்சுவையாக பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘ஒரு முறைதான் விமானத்தில் சென்ற போது அருகில் இருந்த நபர் தன்னை மீம்ஸ் போடுபவர் என்று அறிமுகப்படுத்தினார். உடனே நான் கேட்டேன் என்ன பாத்தா எப்படி தெரியுது? எல்லாரும் என்னை மட்டும் மீம்ஸ் போடுறீங்க? யாரும் கருப்பா இல்லையா? குள்ளமா இல்லையா? யாரும் சுருட்ட முடி இல்லையா? என்று கேட்டேன்.
அதற்கு அந்த நபர் அக்கா உங்களை மீம்ஸ் போட்டால் தான் அதிக பார்வையாளர்கள் வருகிறது. எது வியாபாரம் ஆகிறது அது தானே அதிகம் பிடிக்கும். அதிக வியூஸ் வந்தால் வருமானம் வரும். இதனையடுத்து, விமானத்தில் இருந்து இறங்கும் போது அந்த நபர் அக்கா மன்னிச்சிடுங்க, இனி உங்களை மீம்ஸ் போட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு நான் எனக்கு அவமானம் வருகிறது என்றாலும், உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் நீங்கள் தொடருங்கள். என்னால் யாருக்காவது உதவி வருகிறது, என் தன்மானத்தை குறித்து உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் தொடருங்கள் என தன்னம்பிக்கை ஊட்டியதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எப்போது பார்த்தாலும் மீம்ஸ்களில் பரட்டை பரட்டை என்று போடுகிறார்கள். 16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு பரட்டை என்ற பெயர் வந்தது. அடுத்த பரட்டை என்று பெயர் வாங்கியது நான்தான் போல, சுருட்டை முடி பறக்கிறது, அவ்வளவு பெரிய இதா? காலேஜ் படிக்கும்போது என்னுடைய உடைக்கே ரசிகர்கள் கூட்டம் உண்டு என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…