ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..
நித்யானந்தா மரணமடைந்துவிட்டார் என தகவல் பரவி வரும் நிலையில் நேரலையில் தோன்றி உயிரோடு இருப்பதாக தெரியப்படுத்தியுள்ளார்.

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலம் தெரிவித்தது தலைப்பு செய்தியாக மாறிவிட்டது.இதையடுத்து, நித்தியானந்தாவின் பல்லாயிரம் கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடைபெறுகிறதா? என்று பலரும் கேள்விகளையும் எழுப்ப தொடங்கிவிட்டார்கள். அதனை தொடர்ந்து நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், கைலாசா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். இந்து எதிரிகள், வெறுப்பாளர்கள் என்னுடைய நேரத்தை வீணடிக்கின்றனர். “மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். இப்படியே பண்ணா என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன் பாத்துக்கோங்க”என்று அவர் பேசிய வீடியோ வெளியீட்டு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி இன்று காலை 4:30 மணிக்கு நேரலையில் உரையாற்ற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுருந்தது. அதன்படி இன்று அதிகாலை அவர் நேரலையில் தோன்றி 3 மணி நேரம் பேசியிருக்கிறார்.
நேரலையில் பேசிய அவர் ” நான் இறந்துவிட்டதாக பரவும் தகவலை பார்த்து எனக்கு முதலில் சிரிப்பு தான் வருகிறது. நான் மிகவும் ஆரோகியதுடன்..பாதுகாப்பாக…மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதுவரை அண்ணாமலையன் சொன்னதை போல தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். இனிமேலும் அப்படி தான் வாழ்வேன். நன்றாக புரிந்துகொள்ளுங்கள் நான் யாருக்கும் துக்கம் கொடுக்கமாட்டேன். எனக்கும் யாருக்கும் துக்கம் கொடுக்கவிடவே மாட்டேன்.
மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னைப் பற்றியும் கேட்டால் எப்போதும் நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். பலர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும், அவர்கள் நினைக்கும் போக்கில் கைலாசாவை நடத்த முடியாமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன். ஆனாலும் அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன்.
நான் ஆரோக்கியமாக இருக்கிறேனா என்று சில ஊடகங்கள் நேர்மையான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதை பார்த்தேன். அவர்கள் கொடுத்த அன்பிற்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதைப்போல மக்கள் பலரும் அதிர்ச்சியடைந்து எனக்கு செய்திகளை அனுப்பினார்கள் அவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது நான் எங்கேயும் போகவில்லை இன்று, ஏப்ரல் 3, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனவும் நித்யானந்தா பேசி விளக்கம் அளித்தார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
🔴Breaking News! நேரலையில் பகவான் நித்யானந்த பரமசிவம்! ஏப்ரல் 3, 2025 #Nithyananda #KAILASA https://t.co/JihnVDQnU3
— KAILASA’s SPH NITHYANANDA (@SriNithyananda) April 2, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025