“நான் குற்றவாளி என்னை சுட்டு விடாதீர்கள்” போலீசில் சரண் அடைந்தனர் நபர்…!

Default Image

உத்தரபிரதேச மாநிலம் சம்பால் என்ற மாவட்டத்தில் சமூக விரோத செயல்களை செய்யும் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி என்கவுண்டர் செய்துவருகின்றார்கள். அந்த வகையில் தேடப்பட்ட குற்றவாளி ஒருவர் கழுத்தில் பதாகை கட்டி காவல் நிலையத்திற்குள் வந்தார். அந்தப் பதாகையில் நான் குற்றவாளி சரணடைகிறேன் என்னை சுட்டு விடாதீர்கள் என்று காவல்துறையினருக்கும் முன்பு முழங்கால் விட்டு சரணடைந்தார்.

மேலும் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் அந்த குற்றவாளி காவல்துறையினரின் என்கவுண்டர் செய்து கொன்று விடுவதாக அச்சமடைந்த காரணத்தால் சரண் அடைந்ததாக தெரியவந்துள்ளது.

அந்த குற்றவாளியை கண்டுபுடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் 15,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் சரணடைந்த இந்த குற்றவாளியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்