சட்டவிரோத மணல் கடத்தல் கும்பலை தடுக்கச் சென்ற பெண் அதிகாரியை அந்த கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தின் பிஹ்தா நகரில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சுரங்கத்துறைக்கு தெரிய வந்த நிலையில், சுரங்கத்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் அந்த சம்பவ இடத்துக்குச் சோதனை நடத்துவதற்காக சென்றுள்ளார்.
அந்த பெண் அதிகாரி அங்கு வந்ததை பார்த்த மணல் அள்ளிக்கொண்டிருந்த நபர் பலரும் ஒன்றுகூடி பெண் அதிகாரியைக் இழுத்து சென்று கற்களால் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், வீடியோ வைரலானதை தொடர்ந்து பாட்னா மாவட்டத்தின் எஸ்பி ராஜேஷ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் பேசியதாவது ” அப்பகுதியில் மணல் அள்ளுவது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாவட்ட சுரங்க அதிகாரி ஒருவரை சமூக விரோதிகள் தாக்கினர். இதில் 44 பேர் கைது செய்யப்பட்டனர், மாவட்ட சுரங்க அதிகாரி மற்றும் இரண்டு சுரங்க ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…