சட்டவிரோத மதுபான கடத்தல்.! போலீசாரிடம் சிக்கிய ரூ.1.1 கோடி மதிப்புள்ள மதுபானங்கள்.!
குஜராத்திற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ரூ.1.1 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் இருந்து குஜராத்திற்கு சட்டவிரோதமாக டிரக்கில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.1 கோடி மதிப்புள்ள மதுபானங்ககளை பறிமுதல் மத்தியப் பிரதேச போலீஸார் பறிமுதல் செய்தனர். ஹரியானா மாநிலத்தில் இருந்து குஜராத்திற்கு ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுடன் மதுபானங்களை மறைத்து வைத்து ஒரு டிரக்கில் கொண்டு சென்றனர்.
டிரக்கில் சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தப்படுவது குறித்து ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பெர்ச்சா காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் டிரக்கை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுடன் மறைத்துவைக்கப்பட்ட ரூ.1.12 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.
டிரக் ஓட்டுனரிடம் கேட்டதற்கு ஹரியானாவில் இருந்து சரக்குகளை எடுத்துக்கொண்டு குஜராத்திற்குச் செல்வதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து டிரக் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து டிரக்கை பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்தியதற்காக டிரக் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.