அமெரிக்காவுக்கு சட்டவிரோத குடியேற்றம்… 21 குஜராத்தியர்களுக்கு சிக்கல்… ஏஜென்ட்களுக்கு வலைவீச்சு.!

கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் உள்ள நிகரகுவா எனும் இடத்திற்கு 303 பயணிகள் உடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில் 299 பேர் இந்தியர்கள் என்றும், 11 சிறார்கள் அந்த விமானத்தில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த விமானமானது எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி எனும் விமான நிலையத்தில் நின்றுள்ளது. அப்போது அந்த விமானநிலைய அதிகாரி பயணிகளின் விவரத்தை ஆராய்ந்த போது, அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதும், அவர்கள் துபாய் மூலம் அமெரிக்கா செல்ல இருந்ததும் தெரியவந்தது.
பாரிஸ் விமான நிலையத்தில் 3 நாளாக தவித்த 300 இந்தியர்கள்.? நீதிபதிகள் அதிரடி உத்தரவு.!
அதனால், சந்தேகத்தின் பெயரில் அவர்கள் அனைவரிடத்திலும் அங்குள்ள விமானநிலைய அதிகாரிகள் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். இதனால், 3 நாட்களாக பயணிகள் பாரிஸ் விமான நிலையத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவியது. அதன் பின்னர், கடந்த சனிக்கிழமை மாலை பெரும்பாலான இந்தியர்கள் நாடு திரும்ப பாரிஸ் நாட்டு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து,, 276 இந்திய பயணிகள் டெல்லி புறப்பட்டனர். அதில் 21 பயணிகள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். டெல்லியில் இருந்து 21 குஜராத் பயணிகளும் சொந்த ஊர் திரும்பினர். ஒரே நேரத்தில் 21 பேர் அமெரிக்க செல்ல திட்டமிட்டு இருந்தததால், சந்தேகமடைந்த குஜராத் புலனாய்வு அமைப்பு தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியது.
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் ஏஜென்ட்கள் பற்றியும் விசாரணையை குஜராத் புலனாய்வு அமைப்பு தீவிரப்படுத்தியது. சொந்த ஊர் திரும்பிய 21 குஜராத் பயணிகளும் பனஸ்கந்தா, மெஹ்சானா, காந்திநகர், ஆனந்த் மற்றும் பதான் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அந்த 21 பேரையும் அமெரிக்க அனுப்ப ஏற்பாடு செய்த 6 ஏஜெண்ட்களையும் குஜராத் புலனாய்வு அமைப்பினர் தேடி வருகின்றனர். மேலும், சொந்த ஊர் திரும்பிய 21 பேரிடமும் குஜராத் சிறப்பு புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025