Laxmidhar Behera : இறைச்சி சாப்பிடுவதால் இயற்கை சீற்றம்.? சர்ச்சையை கிளப்பிய ஐஐடி இயக்குனர்.! காங்கிரஸ் கண்டனம்.!

IIT Mandi Director Laxmidhar Behera - Congress Leader Jairam Ramesh

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேக வெடிப்பு, கனமழை காரணமாக இமாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் பெரும் வெள்ளம், மழையினால் பாதிக்கப்பட்டன. அதுவும் குறிப்பாக இமயமலை அமைந்துள்ள பகுதிகளில் ஒன்றான ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு, மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம் என இயற்கை சீற்றத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டது.

இத்தகைய இயற்கை சீற்றங்கள் மலைப்பிரதேச பகுதிகளில் வருவது இயல்புதான் என்றாலும் இது குறித்து ஐஐடி மண்டி தலைவர் லஷ்மிதார் பெஹரா (Laxmidhar Behera) மாணவர்கள் மத்தியில் காணொளி வாயிலாக பேசிய கருத்துக்கள் தற்போது மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறிஉள்ளது.

ஐஐடி மண்டி இயக்குனர் லஷ்மிதார் பெஹரா (Laxmidhar Behera) அண்மையில் ஐஐடி மாணவர்கள் மத்தியில் காணொளி காட்சி வழியாக உரையாற்றினார். அப்போது பேசுகையில், பலர் வளர்ப்பு விலங்குகளை கொடூரமாக கொன்று அதன் இறைச்சியை நாம் சாப்பிடுவது சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இயற்கை சீற்றங்கள் வருவதற்கு இவைதான் காரணமாக அமைகிறது.

இப்படி நாம் விலங்குகளை கொடுமைப்படுத்துவதையும், அதனை கொன்று சாப்பிடுவதையும் நிறுத்துகிறோமோ அப்போது தான் இயற்கை பேரிடரில் இருந்து நாம் தப்ப முடியும். அதனால் மாணவர்கள் நீங்கள் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என அந்த காணொளி காட்சி வாயிலாக ஐஐடி மண்டி இயக்குனர் லஷ்மிதார் பெஹரா கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கள் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது X சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், பிரதமர் மோடி அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என பேசுகிறார். ஐன்ஸ்டினுக்கும், நியூட்டனுக்கும் ஒரு மத்திய அமைச்சருக்கு வித்தியாசம் தெரியவில்லை. டார்வின் கோட்பாடுகளை பாட புத்தகங்களில் நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், இப்போது ஐஐடி இயக்குனர் ஓர் அபத்தமான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் அந்த பதவிக்கு பொருத்தம் இல்லாதவர் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்