இந்தியாவின் முதல் 3D பிரிண்டிங் வீட்டினை 5 நாட்களில் கட்டி IIT மெட்ராஸின் முன்னாள் மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
ஐ.ஐ.டி மெட்ராஸின்,டுவாஸ்டா என்ற முன்னாள் மாணவர்கள் அமைப்பினர்,கான்கிரீட் 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவின் முதல் 3 டி பிரிண்டிங் வீட்டைக் கட்டியுள்ளனர்.சுமார் 600 சதுர அடியில் கட்டப்பட்ட இந்த வீட்டில்,ஒரு படுக்கையறை,ஹால் மற்றும் ஒரு சமையலறை ஆகியவை உள்ளன.
இந்த கான்கிரீட் 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பமானது ஒரு ஆட்டோமேட்டிக் செயல் முறையாகும்.இந்த நுட்பத்தில்,ஒரு கான்கிரீட் 3 டி அச்சுப்பொறி பயன்படுத்தப்படுகிறது.இதனால் பயனாளர்கள் தாங்கள் விரும்பும் மாடலை கணினியில் உருவாக்கி பின்னர் அந்த மாடலைக் கொண்டு நிஜத்தில் ஒரு 3D கட்டமைப்பிலான வீட்டை உருவாக்க முடியும்.
இந்த தொழில்நுட்பம் இந்தியா போன்ற வளரும் நாட்டில் ஒரு முக்கிய வளர்ச்சிப் பாதையின் படியாகும், ஏனெனில் இது கார்பன் மூலப்பொருட்களைக் குறைப்பது மட்டுமல்லாமல்,4 முதல் 5 நாட்களில் ஒரு வீட்டைக் கட்டும் வேகமான தொழில் நுட்பத்தின் காரணமாக கட்டுமான செலவைக் குறைக்கிறது.மேலும்,வழக்கமான கட்டுமான முறையை விட இந்த தொழில்நுட்பம் சுமார் 30% செலவைகுறைத்து,கட்டிடத்தின் ஆயுளை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்க செய்கிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நாட்டின் முதல் 3D பிரிண்டிங் வீட்டை மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் திறந்து வைத்து இதுகுறித்து கூறுகையில்,”IITயின் முன்னாள் மாணவர்களால் வெறும் ஐந்து நாட்களில் இந்த 3D பிரிண்டிங் வீடு கட்டப்படுள்ளது.இதைப்போன்று எங்களுக்கு விரைவான மாதிரிகள் தேவை.இதன்மூலம்,மலிவு விலையில் வீட்டுவசதி குறித்த இலக்கை அடைவதில் இந்தியா ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டுள்ளது.மேலும்,நாட்டிற்கு இதுபோன்ற அதிகமான இளம் கண்டுப்பிடிப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்”,என்று கூறினார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…